இத்தாலியிலிருந்து ராஜஸ்தான் திரும்பிய குடும்பத்திற்கு கொரோனா

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


ராஜஸ்தானில் பெற்றோர் மற்றும் 3 வயது குழந்தைக்கு குழந்தைக்கு கொரொனா இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அவர்கள் வசிக்கும் பகுதியை சுற்றி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

ஜூன்ஜுனோ மாவட்டத்தை சேர்ந்த தம்பதியர் தங்களின் 3 வயது குழந்தையுடன் கடந்த 10 நாட்களுக்கு முன்பு இத்தாலியிலிருந்து ராஜஸ்தான் திரும்பினார். இதையடுத்து அவர்களை பரிசோதனைக்கு உட்படுத்தியபோது அவர்களுக்கு கொரொனா தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

 

இதையடுத்து அந்த குடும்பத்தினர் இருக்கும் ஒரு கிலோ மீட்டர் சுற்று வட்டார அளவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.


Leave a Reply