“நிர்பயா குற்றவாளிகளுக்கு நாளை அதிகாலை தூக்கு உறுதியானது” திகார் சிறையில் அனைத்து ஏற்பாடுகளும் தயார்!!

நிர்பயா பாலியல் குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது உறுதியாகியுள்ளது. தூக்கு தண்டனைக்கு எதிரான அனைத்து மனுக்களும் தள்ளுபடியான நிலையில், நாளை காலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற வாரன்ட் பிறப்பக்கப்பட்டதை அடுத்து திகார் சிறையில் ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.

 

கடந்த 2013-ம் ஆண்டில் டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார் . நாட்டையே உலுக்கிய இந்த பாலியல் வழக்கில் 4 பேருக்கு கடந்த ஆண்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. தூக்கு தண்டனையை நிறைவேற்ற கடந்த ஜனவரி மாதம் தேதியும் குறிக்கப்பட்டது. ஆனால் கருணை மனு உள்ளிட்ட உள்ளிட்ட பல்வேறு மனுக்களை தாக்கல் செய்த குற்றவாளிகள் தண்டனையை நிறைவேற்றுவதை காலம் கடத்தச் செய்து வந்தனர். இதனால் 3 முறை தூக்குத் தண்டனைக்கான தேதி குறிக்கப்பட்டும் நிறைவேற்ற முடியாத நிலை உருவானது.

 

இந்நிலையில், தனது கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்ததற்கு எதிராகவும், தூக்குத் தண்டனையை நிறைவேற்ற தடை கோரியும் குற்றவாளிகளில் ஒருவனான அக்ஷய்குமார் என்பவன் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று தள்ளுபடியானது. இதையடுத்து இவர்களின் அனைத்து மனுக்களும் தள்ளுபடி ஆன நிலையில் நாளை காலை ஐந்து முப்பது மணிக்கு நான்கு பேருக்கும் தூக்கு தண்டனையை நிறைவேற்ற டெல்லி பாட்டியாலா உயர் நீதிமன்ற நீதிபதி வாரண்ட் பிறப்பித்து உள்ளார் . இதனால் திகார் சிறை வளாகத்தில் நான்கு பேருக்கும் தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. நிர்பயா வழக்கில் 8 ஆண்டுகளுக்கு பிறகு நீதி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 


Leave a Reply