திருப்பதியில் பக்தர்களுக்கு அரை மணி நேரத்தில் சாமி தரிசனம்! கூட்டம் குறைவு!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரோனா வைரஸ் அச்சத்தால் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 300 ரூபாய் கட்டணம் திவ்யதரிசனம் உள்ளிட்ட கட்டண தரிசனம் மட்டுமின்றி சிறப்பு தரிசனம் செல்பவரும் அரை மணி நேரத்திற்குள்ளாக ஏழுமலையானை தரிசித்து திரும்புகின்றனர்.

 

இந்தியாவில் கொரானா பாதிப்பு இதுவரை 125 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் கடந்த வாரம் கர்நாடகாவில் ஒருவரும், டெல்லியில் ஒருவரும் பலியான நிலையில், மும்பையில் சிகிச்சை பெற்று வந்த 64 வயது முதியவர் இன்று பலியானார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.

 

கொரானா அச்சுறுத்தலால் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள் மட்டுமின்றி, தியேட்டர்கள், வணிக வளாகங்கள், பொழுதுபோக்கு இடங்கள், சுற்றுலா இடங்கள், கேளிக்கை விடுதிகள், டாஸ்மாக் பார்கள் என மக்கள் கூடும் இடங்களை வரும் 31-ஆம் தேதி வரை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

 

கொரானா பாதிப்பு இந்தியாவுக்கும் இப்போது அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இந்தியாவில் கொரானா தாக்குதலுக்கு ஆளானோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து 120 ஆக உயர்ந்துள்ளது. 2 பேர் பலியாகியுள்ளனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் அதிரடியாக மேற்கொண்டு வருகின்றன. மக்கள் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு ஏக கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகின்றன.

 

இதில் கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.300 ரூபாய் கட்டணம் திவ்யதரிசனம் உள்ளிட்ட கட்டண தரிசனம் மட்டுமின்றி சிறப்பு தரிசனம் செல்பவரும் அரை மணி நேரத்திற்குள்ளாக ஏழுமலையானை தரிசித்து திரும்புகின்றனர்.


Leave a Reply