தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் 50% முன்னுரிமை…! அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வலியுறுத்தல்!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் 20% முன்னுரிமை என்பதை 50% ஆக அதிகரிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர் நல கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

இது தொடர்பாக இந்த கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் சா. அருணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு வரை தமிழ் வழியில் கல்வி கற்று தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்பதை வரவேற்கின்றோம். அதே நேரத்தில் 20 விழுக்காட்டில் இருந்து 50 விழுக்காடாக உயர்த்த வேண்டும்.

 

தமிழ் வழியில் கல்வி கற்பவர்களுக்கு 2010-ம் ஆண்டு அப்போதைய அரசு கொண்டு வந்த நடைமுறை இதுவரை இருந்து வருகிறது. இந்த நிலையில் பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பைத் தொடர்ந்து பட்டப்படிப்பு வரை தமிழ் வழியில் பயின்று இருந்தால் மட்டுமே அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு தகுதிக்கான வேலைவாய்ப்பில், ஒன்று வகுப்பு முதல் தொடர்ந்து தமிழ் வழியில் பயின்றிருக்க வேண்டும் என்றும் சட்டசபையில் பணியாளர்கள் நிர்வாக சீர்த்திருத்த துறை அமைச்சர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. ஏன் என்றால் தமிழ் வழிக்கல்வியில் அதிக அளவில் ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்கள் மட்டுமே அரசு பள்ளிகளில் பயின்று வருகின்றனர் , இந்த சூழ்நிலையில் பணியாளர் நிர்வாக சீர்த்திருத்த துறை அமைச்சர் அறிவித்திருப்பது ஏழை எளிய குடும்த்தை சார்ந்த அரசு பள்ளி மாணவர்கள் வாழ்வில் ஒளியேற்றும் நிகழ்வாகும். ஏற்கனவே இருக்கும் 20% என்பதை 50 விழுக்காடாக அதிகரிக்க வேண்டும். அது மட்டும் அல்லாமல் ஏற்கனவே தேர்ச்சி பெற 35% மதிப்பெண் என்று இருந்ததை 45% மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று அறிவிப்பை மறுபரிசீலனை செய்து ஏற்கனவே இருப்பது போல தேர்ச்சி பெற 35% மதிப்பெண் எடுத்தால் போதுமானது என மாற்றி அமைத்தால் ஏழை மாணவர்கள் பயன் பெறுவார்கள்.

அதே நேரத்தில், அரசு ஊழியர்கள் மேற்படிப்பு படிக்க வழங்கி வந்த ஊக்க ஊதியத்தை அரசு 10.03.2020 முதல் ரத்து செய்து உத்தரவிட்டது. இதில் பெரும்பாலும் ஏழ்மை நிலையில் இருந்து கடைநிலை ஊழியர்களாக, அதாவது அலுவலக உதவியாளர்கள், இரவு காவலர், ஓட்டுநர்,துப்புறவு பணியாளர்களாக பணியில் சேருகின்றனர். தமிழ்நாடு தேர்வு வாரியத்தின் மூலம் இளநிலை உதவியாளர்களாக தேர்வாகி பின்பு மேற்படிப்பை தொடர அவர்களின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, தொடர்ந்து கல்வி பாதியிலயே நின்று விடக்கூடாது என்பதற்காக, தமிழக அரசு1977 ம் ஆண்டு ஊக்க ஊதியம் வழங்கும் உத்தரவை பிறப்பித்தது .தொடர்ந்து பல்வேறு மேற்படிப்பை தொடர 1978, 1983,1984,1985 ஆண்டுகளில் படிப்படியாக பல்வேறு மேற்படிப்டிப்பிறகு ஊக்க ஊதியம் வழங்க அந்தந்த துறைகளுக்கு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவு தொடர்ந்து வந்த நிலையில், 10.03.2020-க்கு பின்னர் மேற்படிப்பு பயிலும் அரசு ஊழியர்களுக்கு ரத்து செய்வதாக அரசு உத்தரவு பிறப்பித்தது, இந்த உத்தலவை ரத்து செய்து மீண்டும் கடைநிலை ஊழியர்களின் நலன் கருதி மேற்படிப்பிற்கு ஊக்க ஊதியம் பெற ஆணை பிறப்பிற்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வேண்டிக்கேட்டுக் கொள்கிறேன் என
சா.அருணன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Leave a Reply