கொரொனாவால் ரெட் லைட் ஏரியாவில் வாடிக்கையாளர் எண்ணிக்கை குறைவு!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


மேற்கு வங்க மாநிலத்தில் கொரொனாவால் இதுவரை யாரும் பாதிக்கப்படாத நிலையில், கொல்கத்தாவில் உள்ள சிவப்பு விளக்கு பகுதியான சோனாக்ஷியில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து தெருக்கள் முழுவதும் வெறிச்சோடின.

 

ஆசியாவிலேயே மிகப்பெரிய சிவப்பு விளக்குப் பகுதியாக கருதப்படும் இப்பகுதியில் நாள்தோறும் 30 ஆயிரத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் வந்து செல்வதால் கொரொனா காரணமாக கடந்த 10 நாட்களாகவே வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை சில ஆயிரமாக குறைந்துள்ளது.

 

அதேபோன்று பாலியல் தொழிலாளிகள் பலர் தற்போது பணியில் ஈடுபடுவதை நிறுத்தியுள்ளனர். இது குறித்து இங்குள்ள பெண்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கப்பட்டு வருவதுடன் இருமல், காய்ச்சல் ஏற்பட்டால் மருத்துவரை அணுகும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Leave a Reply