கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி! ஆனால் பயன்பாட்டுக்கு வர 12 மாதங்கள் ஆகுமாம்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


உலகிலேயே முதல் முறையாக அமெரிக்காவில் கொரொனா வைரஸ் தடுப்பூசி உருவாக்கப்பட்டு மனிதர்கள் மீதான பரிசோதனை தொடங்கியுள்ளது. கொரொனா வைரஸுக்கு எதிராக உலகமே போராடி வரும் நிலையில், இது புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. கொரொனா வைரசை முறியடிக்கும் அங்கீகரிக்கப்பட்ட தடுப்புமருந்து என எதுவும் இதுவரை இல்லை.

 

இந்நிலையில் அமெரிக்காவின் தேசிய சுகாதார ஆராய்ச்சி நிறுவனமும், மசோசியேட்ஸ் மாநிலத்தில் செயல்படும் கேம்ப்ரிட்ஜில் மாடனா என்ற உயிரி தொழில்நுட்ப நிறுவனமும் இணைந்து கொரொனா வைரஸ் தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளனர். நார்வே நாட்டை சேர்ந்த சி‌இ‌பி‌ஐ என்ற ஆராய்ச்சி கட்டளையும் இதற்கான நிதி உதவிகளை வழங்கி வருகிறது.

 

எம்ஆர் என்‌ஏ 1273 எனக் குறிப்பிடப்படும் இந்த தடுப்பூசி மருந்தின் சக்தி கொரொனா வைரஸை முறியடிக்கும் திறன் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்காக மனிதர்கள் மீதான பரிசோதனையும் தொடங்கியுள்ளது. தாங்களாக முன்வந்து 18 முதல் 55 வயது நிரம்பிய ஆரோக்கியமான 45 பேரை தேர்வு செய்து 6 வாரங்களுக்கு இந்த பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

 

சியாட் நகரில் நடைபெற்று வரும் இந்த பரிசோதனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளவர்களில் முதலில் ஒருவருக்கு நேற்று தடுப்பூசி போடப்பட்டது. முதல் கட்ட பரிசோதனை என்பது சாதனை வேகத்தில் தொடங்கியுள்ளதாகவும், விரைவாக தடுப்பூசி மருந்தை நடைமுறைக்குக் கொண்டு வருவதே நோக்கம் எனவும் அமெரிக்க சுகாதார ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது.

 

மனிதர்கள் மீதான கொரோனா வைரஸ் தடுப்பூசி பரிசோதனை தொடங்கி விட்டாலும் பாதுகாப்பானது தான் என உறுதிப்படுத்தப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வர 12 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply