எளிய முதல்வர் என கூகுளில் சர்ச் செய்தல் எடப்பாடி பழனிசாமியின் பெயரே வரும்

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


திமுக கொரொனா வைரஸ் போன்றது என வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் விமர்சித்துள்ளார். மதுரை மாவட்டம் மேலூர் அருகே சேக்கிபட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாத வண்ணம் அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.

 

திமுகவை கொரொனா வைரஸ் என விமர்சித்த ஆர் வி உதயகுமார் அக்கட்சியிலிருந்து தப்பிப்பது மிகவும் சிரமமானது என சாடினார். மேலும் பொய் பேசுவதில் திமுகவினர் கின்னஸ் சாதனை படைத்தவர்கள் எனவும் ஸ்டாலின் பொய்யைத் தவிர வேறு எதுவும் பேச மாட்டேன் என்று சத்தியம் செய்து கொண்டு சட்டமன்றம் வருவதாகவும் ஆர் பி உதயகுமார் குற்றம்சாட்டினார்.

 

அப்போது எடப்பாடி பழனிசாமி குறித்து பேசிய அவர் எளிய முதல்வர் என கூகுளில் தேடினால் எடப்பாடி பழனிசாமி பெயரே வரும் என குறிப்பிட்டார்.


Leave a Reply