திருப்பூர் பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் ஆடைகளை நூதன முறையில் திருடிச் செல்லும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. திருப்பூர் பகுதியில் ஏராளமான பின்னலாடை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றன. இதற்கிடையே பின்னலாடை நிறுவனத்தில் வேலை செய்யும் வட மாநில இளைஞர் ஒருவர் தனது உடலில் ஆடைகளை மறைத்து நூதன முறையில் திருடியுள்ளார். இதனை கண்காணிப்பாளர் கண்காணித்து வந்துள்ளார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.