உத்தரப்பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் சூறைக்காற்றுடன் கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை கொட்டியதால் பல ஏக்கர் அளவிலான பயிர்கள் சேதம் அடைந்தன. அம்மாநிலத்தின் பிலிப்பைன்ஸ், முசாபர்நகர், ஜான்பூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் நேற்று இரவு கன மழை வெளுத்து வாங்கியது.
பல இடங்களில் சின்ன பளிங்கு கற்கள் அளவிற்கு ஆலங்கட்டி மழை கொட்டி தீர்த்தது. மழையால் 2 பேர் உயிரிழந்த நிலையில் பல ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கோதுமை, உருளைக்கிழங்கு, பருப்பு வகைகள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.