கொரானா விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ரோபோக்கள்

கேரளாவின் கொச்சி நகரத்தில் ரோபோக்கள் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருவதால் கொரொனா வைரஸ் விழிப்புணர்வு பொதுமக்களிடம் அதிக கவனம் பெற்றுள்ளது. ரோபோட்டிக்ஸ் சென்டர் நிறுவனம் உருவாக்கியுள்ள இரண்டு ரோபோக்கள் கையை சுத்தம் செய்வதற்கான சானிடைசர், பாதுகாப்பு கவசங்களை பொதுமக்களுக்கு வழங்குகின்றன.

 

மேலும் நோய்களை தடுப்பதற்கான சுகாதார வழிகாட்டுதல்களை ஆடியோ மற்றும் வீடியோ மூலமாக விவரிக்கின்றன. மக்கள் அதிகம் கூடும் இடங்களான விமான நிலையம், வணிக வளாகங்களில் இதுபோன்ற ரோபோக்களை நிறுவ திட்டமிட்டுள்ளதாக ரோபோட்டிக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.


Leave a Reply