--- --:--:-- --

கொரோனா பரவுவதை தடுக்க தேவையற்ற பயணங்களை தவிருங்கள்

1

கொரானா வைரஸ் பரவுவதை தடுக்க மக்கள் அத்தியாவசிய மற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். பீதிக்கு நோ சொல்லி முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு யெஸ் சொல்லுங்கள் என தனது ட்விட்டர் பதிவில் பிரதமர் கூறியுள்ளார்.

 

அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் யாரும் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ள மாட்டார்கள் என்றும் பிரதமர் கூறியுள்ளார். முன்னெச்சரிக்கையாக பல்வேறு துறைகள் மற்றும் மாநிலங்கள் சார்பில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும், கூட்டமாக கூடுவதை தவிர்க்கும் போது பரவுவதை தவிர்க்க முடியும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

 

கொரோனாவை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கவில்லை என காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். கொடூரத்தை உணராமல் அதற்கான நடவடிக்கை எடுக்காமல் மத்திய அரசு தூங்குவதாக தெரிவித்தார்.

 

பொருளாதாரத்தை நரேந்திரமோடியின் கொள்கைகளும், அரசியலும் சுனாமி போன்று அழித்துவிட்டதாக ராகுல்காந்தி வேதனை தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon