ஃபெடரல் அரசு ஊழியர்களுக்கு அரசு வழங்கியுள்ள ஸ்மார்ட்போன்களில் டிக் டாக் செயலியை தடை செய்வதற்கான மசோதா நேற்று அமெரிக்க செனட்டில் தாக்கல் ஆனது.
டிக்டாக் செயலி மூலம் அமெரிக்கா குறித்த ரகசியங்களை சீனா திருடுகிறது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில்ஜோஸ் ஹெவ்லி, ஸ்காட் ஆகிய குடியரசு கட்சியின் இரண்டு செனட்டர்கள் இந்த மசோதாவை தாக்கல் செய்தனர்.
வெளியுறவு அமைச்சகம், உள்நாட்டு பாதுகாப்பு, உளவுத் துறை உள்ளிட்ட ஊழியர்கள் அரசு வழங்கும் செல்போன்களில் பயன்படுத்த தடை விதிக்க இந்த மசோதா வகை செய்கிறது. சீன நிறுவனமான டிக்டாக்கில் சீன கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும் இடம் பெற்றுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள ஹாவ்லி இந்த செயலியை அமெரிக்காவின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளதாக கூறினார்.
ஹாவ்லியின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என நிர்வாகம் கூறியுள்ளது.