இயக்குநர் வீண் செலவு செய்ததால் படத்தை தானே இயக்க முடிவு
வெளிநாடுகளில் கதை எழுதுவதற்காக 35 லட்சம் ரூபாய் உள்ளிட்ட 13 கோடி ரூபாயை செலவு செய்த நிலையில், துப்பறிவாளன்2 வை இயக்கி வந்த இயக்குனர் படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் விஷால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
துப்பறிவாளன் 2 படத்தை இயக்கி வந்த மிஷ்கின் பாதியிலேயே அதிலிருந்து விலகினார். ரீமேக் உரிமை உள்ளிட்டவை குறித்து மிஷ்கின் விதித்த சில நிபந்தனைகளை விஷால் ஏற்காதது இதற்கான காரணம் என கூறப்பட்டது.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள விஷால் துப்பறிவாளன்2 படத்தை இயக்கியவர் முறையாக திட்டமிட்டு படப்பிடிப்பு நடத்தாமல் தயாரிப்பாளரின் 13 கோடி ரூபாய் பணத்தை செலவழித்த பின்னர் படத்தை விட்டு விலகி இருப்பதாக தெரிவித்துள்ளார். இத்தகையவர்களிடம் மற்ற தயாரிப்பாளர்கள் இரையாகி விடக் கூடாது எனவும் விஷால் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




