கொரொனா அச்சுறுத்தல்…பள்ளிகளுக்கு விடுமுறை கோரிய மனு தள்ளுபடி!
இந்தியாவில் கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.அதைப்போல கேரளாவில் 17 பேரும், உத்தர பிரதேசத்தில் 10 பேரும் கொரானா வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
மேலும் டெல்லியை சேர்ந்த 6 பேருக்கும், கர்நாடகாவை சேர்ந்த நான்கு பேருக்கும் வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரொனா வைரஸ் தொற்று அச்சத்தால் பள்ளிகளுக்கு விடுமுறை வேண்டும் என்ற கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
சென்னையை சேர்ந்த ராஜவேலு உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் எந்த பள்ளியிலும் மாணவர்களுக்கும் கொரொனா வைரஸ் அறிகுறி ஏதுமில்லை என்றும் கொரொனா வைரஸ் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக விளக்கம் அளித்தது.
இதை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம் கொரானா வைரஸ் பரவாமல் தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளை தொடர அரசு அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




