நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். பிகில் படத்தை தொடர்ந்து மாஸ்டர் படத்திற்கு விஜய் வாங்கிய சம்பளம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாக பிகில் பட வசூல் தொடர்பாக வருமான வரி அதிகாரிகள் கடந்த மாதம் அதிரடி சோதனை நடத்தியது பெரும் பரபரப்பானது. நடிகர் விஜய் பிகில் படத்தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம், சினிமா பைனான்சியர் அன்பு ஆகியோரின் வீடு,அலுவலகங்களில் நடத்தப்பட்ட ஐ.டி. சோதனை 2, 3 நாட்கள் நீடித்தது.
நெய்வேலியில்மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய்யை வலுக்கட்டாயமாக சென்னைக்கு அழைத்து வந்து அவருடைய வீட்டில் சோதனை மற்றும் விசாரணை நடத்தியது சர்ச்சையும் ஆனது.
இந்நிலையில் தற்போது மாஸ்டர் படத்திலும் விஜய்க்கு வழங்கப்பட்ட சம்பளம் தொடர்பாக வருமான வரி அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்துள்ளதாக தெரிகிறது. கடந்த இரு தினங்களுக்கு ம்ன் மாஸ்டர் படத்தின் இணைத் தயாரிப்பாளர் வீட்டில் வருமான அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதன் தொடர்ச்சியாக பனையூரில் உள்ள நடிகர் விஜய்யின் பண்ணை வீட்டில் இன்று வருமான வரி அதிகாரிகள் சோதனை மற்றும் விசாரணை மேற்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,