காங்கிரஸ் நிர்வாகிகளை குண்டு கட்டாக தூக்கி வாகனத்தில் ஏற்றிய போலீசார்

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் அனுமதியின்றி பாதயாத்திரை சென்ற இளைஞர் காங்கிரசாரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் தண்டி யாத்திரையில் 90 ஆவது நினைவு தினத்தையொட்டி இளைஞர் காங்கிரஸ் சார்பில் குளச்சலில் இருந்து பாதையாத்திரை மேற்கொண்டார்கள்.

 

போலீசார் தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்ற காங்கிரஸ் கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளை குண்டுகட்டாக தூக்கி வாகனத்தில் ஏற்றினார்.

 

தொடர்ந்து அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் தாக்கியதில் பத்துக்கும் மேற்பட்டோர் காயமுற்றனர் கூறப்படுகிறது.


Leave a Reply