ஒற்றை வாழைப்பழத்திற்காக ஒரே நேரத்தில் சண்டையிட்டு கொண்ட குரங்குகள்!
தாய்லாந்தில் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான குரங்குகள் வாழைப்பழத்திற்காக சாலையில் மொத்தமாக மோதிக்கொண்டன. மத்திய தாய்லாந்தில் உள்ள நவ்சரி என்ற இடத்தின் புறநகர்ப் பகுதியில் ஏராளமான குரங்குகள் வசித்து வருகின்றன.
தனித்தனியாக குழுவாக இயங்கி வரும் இந்த குரங்குகள் உணவிற்காக அவ்வப்போது மோதிக் கொள்வது வழக்கம். இந்த நிலையில் ரோட்டரி ஊருக்குள் வந்த குரங்கு கூட்டத்திற்கு ஒரே ஒரு வாழைப்பழம் கிடைத்தது. அவ்வளவுதான் வாழைப்பழத்தை யார் உண்பது என்பதில் போட்டி ஏற்பட்டு இறுதியில் நூற்றுக்கணக்கான குரங்குகள் சாலையில் இறங்கி கடுமையாக மோதிக்கொண்டனர்.
மொத்த குரங்கு கூட்டமும் சாலைக்கு வந்ததால் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் வாழைப்பழத்தை ஒருவர் மாறி ஒருவர் பறித்துக்கொண்டே குரங்குகள் நகரின் மறுபுறத்தில் சென்றன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




