கொரோனா அறிகுறி! அரசுக்கு தெரிவித்த தனியார் மருத்துவர் பணிநீக்கம்

கொரொனா அறிகுறியோடு வந்தவர் பற்றி அரசுக்கு தெரிவித்ததால் பணி நீக்கம் செய்யப்பட்டதாக தனியார் மருத்துவமனை மீது பெண் டாக்டர் புகார் தெரிவித்துள்ளார். கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் வந்துள்ளார்.

 

அவரை சினு சியாமளன் என்ற மருத்துவர் பரிசோதித்தார். அப்போது அவர், தான் கத்தாரில் இருந்து வருவதாகவும் இதுபற்றி சுகாதாரத் துறைக்கு தெரிவிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். உடனே டாக்டர் சினு சியாமளன் இதுபற்றி சுகாதாரத் துறைக்கு தெரிவிக்கும்படி கூறியுள்ளார்.

 

அதற்கு அவர் மறுத்ததோடு தான் கத்தாருக்கு திரும்ப இருப்பதாகவும் தெரிவித்தார். ஆனால் அவருக்கு கொரொனா அறிகுறி இருந்தால் மருத்துவர் அவரைப் பற்றி காவல்துறை மற்றும் சுகாதார அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

 

அதன்பின் நடத்திய பரிசோதனையில் அவருக்கு வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதியானது. இந்நிலையில் அரசு அதிகாரிகளுக்கு கொரொனா அறிகுறியுடன் வந்தவர் குறித்து தெரிவித்ததாகவும் தொலைக்காட்சி மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தியதற்காகவும் அந்த மருத்துவமனை நிர்வாகம் சினு சியாமளன் பணி நீக்கம் செய்துள்ளது.


Leave a Reply