--- --:--:-- --

அட்டகாசம் செய்த குரங்குகளை கரடி உடை அணிந்து விரட்டிய பாதுகாப்பு படை!

9

உத்தரகண்டில் இந்திய திபெத்திய எல்லைப் பகுதிகளில் உள்ள காப்பாளர் குடியிருப்பில் புகுந்து அட்டகாசம் செய்து வந்த குரங்குகளை கரடி உடையணிந்த எல்லைக் காவல் படையினர் விரட்டியடித்தனர்.

 

அந்த மாவட்டத்தில் இந்தோ திபெத்திய எல்லைப் படையினர் வசித்துவரும் காவலர் குடியிருப்பில் குரங்குகள் கூட்டம் கூட்டமாக புகுந்து அட்டகாசம் செய்து வந்துள்ளன. இதனால் பெரிதும் பாதிப்படைந்த குடியிருப்புவாசிகள் குரங்குகளை விரட்ட பலவாறு முயற்சித்துள்ளனர்.

 

அதன் ஒரு பகுதியாக உடையணிந்த இரண்டு காவலர்கள் குரங்குகளை விரட்ட முயன்றனர். அவர்களை பார்த்து பயந்து குரங்கு கூட்டம் குடியிருப்பு பகுதியை விட்டு வனப்பகுதிக்குள் சிதறி ஓடியது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon