கள்ளநோட்டு சப்ளை செய்தவரை தமிழகத்தில் கைது செய்த மகாராஷ்டிரா போலீசார்!
கடந்த 5ஆம் தேதி மும்பை கடை ஒன்றில் கள்ளநோட்டு மாற்ற முயன்ற ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் தமிழகத்திலிருந்து கள்ளநோட்டு சப்ளை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது. இதுகுறித்து தமிழக போலீசார் உதவியுடன் மகாராஷ்டிர போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் தமிழகத்திற்கு வந்த மும்பை காவல் ஆய்வாளர் ராஜேஷ் பாபு ராவ் தலைமையிலான மகாராஷ்டிர போலீசார் நேற்று நள்ளிரவு சந்தேகத்தின் பெயரில் வேலூரை சேர்ந்த பாஸ்கர் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினார்.
அப்போது கிடைத்த தகவலின் அடிப்படையில் ஆம்பூரில் சரவணன் என்பவர் வீட்டில் சோதனை நடத்தியதில் கள்ள நோட்டுகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஏழரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள 500 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்த மகாராஷ்டிர போலீசார் பாஸ்கர் மற்றும் சரவணனை கைது செய்தனர்.
விசாரணையில் சரவணனுக்கு மகாராஷ்டிர மாநிலத்தில் பல்வேறு கல்வெட்டுக்கள் வழக்குகளில் தொடர்புடைய தெரியவந்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




