--- --:--:-- --

காங்கிரஸ் எம்‌எல்‌ஏக்கள் 17 பேர் மாயம்

2

மத்திய பிரதேசத்தில் அதிருப்தியில் இருக்கும் காங்கிரஸ் தலைவர் ஜோதி ஆதித்ய சிந்தியா தலைமையில் அவரது ஆதரவு எம்‌எல்‌ஏக்கள் 17 பேர் திடீரென மாயமானதால் ஆளும் காங்கிரஸ் அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது. 230 பேர் உள்ள மத்திய பிரதேச சட்டமன்றத்தில் காங்கிரசுக்கு ஆதரவாக 117 எம்எல்ஏக்களும், பாஜகவிற்கு 107 பேரும் உள்ளனர்.

 

இந்நிலையில் மாநில காங்கிரஸ் தலைவராகும் ஜோதி ஆதித்ய சிந்தியா முயற்சிக்கு முதல் அமைச்சர் கமல்நாத் முட்டுக்கட்டை போடுவதால் அங்கு உட்கட்சி பூசல் கொடிகட்டி பறக்கிறது. 26ஆம் தேதி நடக்கவுள்ள மாநிலங்களவை எம்பி தேர்தலில் காங்கிரஸ், பாஜக ஆகியன தலா ஒரு இடத்தில் வெற்றி பெறும் நிலையில் உள்ளன. அதேசமயம் மூன்றாவது எம்பியை தேர்ந்தெடுப்பதில் இழுபறி நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்நிலையில் 17 எம்எல்ஏக்கள் காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த முதலமைச்சர் கமல்நாத் டெல்லியிலிருந்து அவசரஅவசரமாக போபால் வந்தடைந்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon