கோவிலில் படுத்திருந்தவர் தலையில் கல்லை போட்டு கொடூர கொலை

புதுச்சேரியில் கோவில் வளாகத்தில் மது போதையில் படுத்து இருந்த நபரை தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கடலூரை சேர்ந்த டேனியல் எனும் நபர் புதுச்சேரி கண்ணிய கோவில் பகுதியில் மது அருந்திவிட்டு அங்குள்ள கோவில் வளாகம் ஒன்றில் படுத்து உறங்கியுள்ளார். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் டானியல் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

 

ஒருகட்டத்தில் அந்த நபர் டானியலின் தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்துள்ளார். சம்பவம் குறித்து அறிந்த கிருமாம்பாக்கம் போலீசார் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு கொலையாளிகளை தேடி வருகின்றனர்.


Leave a Reply