நடிகர் ரஜினிக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு!

பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீதான வழக்கில் எழும்பூர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. கடந்த ஜனவரி மாதம் நடந்த துக்ளக் ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது.

 

இது தொடர்பாக திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த உமாபதி என்பவர் புகார் அளித்தார். எனினும், போலீசார் நடவடிக்கை எடுக்காததால் சென்னை எழும்பூர் இரண்டாவது குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த 4ம் தேதி உமாபதி வழக்கு தொடர்ந்தார்.

 

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஆறுமுகம் என்ற வழக்கறிஞர் இடையீட்டு மனு தாக்கல் செய்தார். அதில் ரஜினிகாந்த் மீது வழக்கு பதிவு செய்யாத நிலையில் வழக்கு மனுவில் ரஜினிகாந்த் குற்றவாளி எனக் குறிப்பிட்டு உள்ளதால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என வாதிட்டார்.

 

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பை இன்று ஒத்திவைத்துள்ளார். எனவே அவதூறாக பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீதான வழக்கில் எழும்பூர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.


Leave a Reply