யானையை விரட்டியடித்த எருமை கன்று

யானை ஒன்றை எருமைக்கன்று விரட்டி அடிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமூக இணையத்தளங்களில் வெளியாகியுள்ள அந்த வீடியோவில் மிகப்பெரிய யானையைக் கண்டு எருமை அச்சத்துடன் பின்னால் நின்ற போதும் எருமைக்கன்று துணிச்சலாக செயல்பட்டு அதை விரட்டி அடிக்கும் காட்சி உள்ளது. அந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை.

 

எனினும் சமூக வலைத்தளத்தில் அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. யானையைக் கண்டு பயப்படாமல் அதை விரட்டியடித்த எருமைக்கன்றை பலரும் புகழ்ந்து பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.


Leave a Reply