பெண்களின் ஹீரோவான விஜய் தேவரகொண்டா பெயரை பயன்படுத்தி பெண்களிடம் ஆபாச உரையாடல்!
நடிகர் விஜய் தேவரகொண்டா பெயரில் போலியாக பேஸ்புக் கணக்கு தொடங்கி பெண்களிடம் ஆபாச உரையாடல் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் தனது பெயரில் போலியாக பேஸ்புக் கணக்கு தொடங்கி பல பெண்களிடம் ஆபாசமாக சாட்டிங் செய்து தவறான நோக்கத்திற்கு அழைத்து விவரம் நடிகர் விஜய் தேவரகொண்டா கவனத்திற்கு வந்தது. இதையடுத்து சைபர் கிரைம் போலீசாரிடம் அவர் புகார் தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் ஏற்பாடு செய்த பெண் ஒருவர் அந்த மர்மநபர் இடம் ஃபேஸ்புக்கில் பேச்சு கொடுத்து ஹைதராபாத்துக்கு வரவழைத்தார். அப்போது அங்கு மறைந்து நின்று நோட்டமிட்ட போலீசார் மற்றும் விஜய்தேவரகொண்டா ஆட்கள் அந்த நபரை சுற்றிவளைத்தனர். இதையடுத்து அந்த நபர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




