தனது காரை பறிமுதல் செய்து ஓட்டிச்சென்ற காவலர்களை அதன் உரிமையாளர் ஜிபிஎஸ் மூலம் காருக்குள்ளே 3 மணிநேரம் சிறைவைத்த ருசிகர சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது.
லகிம்பூர்கெரி மாவட்டத்தில் இரண்டு நபர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் விசாரிக்க லக்னோ கோமதி நகர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர், இரண்டு காவலர்கள் சென்றனர். அங்கு புகாருக்கு ஆளான நபர் எஸ்யூவி பறிமுதல் செய்ய அவர்கள் அதில் ஜாலியாக பயணம் செய்தனர்.
இதனை அறிந்த கார் உரிமையாளர் மைக்ரோ கண்ட்ரோலர் மூலம் காரில் உள்ள ஜிபிஎஸ் வழியாக எஞ்சினை அணைத்து காரை லாக் செய்து விட்டார். இதை அறியாத காவலர்கள் சுமார் மூன்று மணிநேரம் கூண்டுக்குள் அடைபட்ட பறவைகளைப் போல காருக்குள் சிக்கி தவித்தனர்.
லக்னோவில் இருந்து 143 கிலோ மீட்டர் தொலைவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதன் பின்னர் காவலர்கள் விடுவிக்கப்பட்டனர். காரை உல்லாசப் பயணத்திற்கு பயன்படுத்திய காவலர்கள் மீது காவல் ஆணையரிடம் கார் உரிமையாளர் புகார் அளித்துள்ளார்.