எஸ் பேங்கில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே எடுக்க முடியும்!

பிரபல தனியார் வங்கியான யெஸ் வங்கி கணக்கில் இருந்து அதிகபட்சமாக 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே பணம் எடுக்க முடியும் என்று ரிசர்வ் வங்கி வரம்பு நிர்ணயித்துள்ளது. வாராக்கடன், மோசமான நிர்வாகம் உள்ளிட்ட பல காரணங்களால் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் எஸ் வங்கி மீது பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

 

வங்கி நிர்வாக செயல்பாடுகள் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்துள்ளது. இது தொடர்பான அறிக்கையில் வாடிக்கையாளர்களின் பணத்திற்கும் அதற்கான வட்டிக்கும் எந்தவிதமான பாதிப்பும் இருக்காது என ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.

 

மருத்துவம், மேற்படிப்பு கட்டணம், திருமணம் உள்ளிட்ட தவிர்க்க முடியாத அவசர தேவைகளுக்கு வங்கி மேலாளரின் அனுமதியுடன் ஐந்து லட்சம் ரூபாய் வரை பணம் எடுத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply