--- --:--:-- --

சீனாவில் இருந்து வந்த பூனை 20 நாட்களாக காவலில் வைத்துள்ளதற்கு பீட்டா எதிர்ப்பு!

5

சீனாவிலிருந்து வந்த சரக்கு கப்பலில் இருந்து பிடிப்பட்ட பூனைக்கு கொரொனா தொற்று இருக்கிறதா என்று துறைமுக அதிகாரிகள் கண்காணித்து வரும் நிலையில், அதனை விடுதலை செய்ய வேண்டும் என்று பீட்டா அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

 

20 நாட்களுக்கும் மேலாக சென்னை துறைமுகத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ள இந்த பூனையை சீனாவிற்கு திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதுவரை பூனை உயிரோடு இருக்காது என்று கூறியுள்ள பீட்டா அமைப்பினர் பூனைகளுக்கும் கொரொனா பரவும் என்ற தவறான நம்பிக்கையால் அதனை தனி இடத்தில் வைத்து இருப்பதாக கூறியுள்ளனர் .

 

சீனாவில் இருந்து சென்னை வரை கப்பல் கண்டெயினர் ஒன்றில் உணவு மற்றும் நீர் இன்றி வந்த இந்த பூனை வைரஸை கொண்டுவராது என்பது தெரியாமல் அதை அப்படியே வைத்திருந்தால் இந்த அப்பாவி ஜீவன் உயிரை விட்டுவிடும் என்று தகவலை தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon