--- --:--:-- --

ஸ்பென்சரில் கத்தியுடன் புள்ளிங்கோ அட்டகாசம்!

4

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த ஆண்டனி, நடராஜன் என்கிற இரண்டு புள்ளிங்கோகளும் ஸ்பென்சர் பிளாசாவில் உள்ள கடையில் வேலை பார்ப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் முன்விரோதம் காரணமாக அதே வணிக வளாகத்தில் உள்ள மற்றொரு கடை ஊழியரான கேசவன் என்பவரை கடந்த ஒன்றாம் தேதி மாலை தாக்கிவிட்டு தப்ப முயன்று உள்ளனர்.

 

இதனை பார்த்த பொதுமக்கள் அந்த இரண்டு புள்ளிங்கோகளையும் பிடிக்க முயன்றனர். அப்போது ஹாலிவுட் படத்தில் வரும் கொலைகார பொம்மை ஆன ஜக்கிய போல தலைமுடி வைத்திருந்த ஆண்டனி என்பவன் கையில் கத்தியுடன் பிடிக்க வந்த மக்களை கத்தியை காட்டி மிரட்டி ஓடவிட்ட காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன.

 

தகவலறிந்த ஆயிரம்விளக்கு போலீசார் கத்தியுடன் சுற்றிய ஆண்டனி மற்றும் நடராஜனை கைது செய்தனர். வணிக வளாகங்களில் பாதுகாப்பு குறைபாட்டை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக இந்த சம்பவம் அரங்கேறி உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon