ஸ்டேப்லர் பின்களால் கலாம் உருவத்தை வடிவமைத்து சாதனை

சென்னை அடுத்த அம்பத்தூரில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் உருவத்தை ஸ்டேப்ளர் பின்களால் வடிவமைத்து கல்லூரி மாணவர் அசத்தியுள்ளார். அனிமா வேர்ல்டு ஆப் ஆர்ட்ஸ் கனவுகள் கலாம் தொண்டு நிறுவனம் இந்த சாதனை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

அதில் ஏற்கனவே 51,620 பெண்களை இணைத்து 580 மீட்டருக்கு தயாரித்து வைத்திருந்த சங்கிலியை பயன்படுத்தி கல்லூரி மாணவர் சிரஞ்சீவி கலாமின் உருவத்தை தத்ரூபமாக வடிவமைத்தார். இதற்கு முன்பு ஸ்டேப்ளர் பின் களை பயன்படுத்தி சங்கிலி தயாரித்த மேற்குவங்க இளைஞரின் சாதனையை முறியடித்த சிரஞ்சீவிக்கு அந்நிறுவனம் சான்றிதழ் வழங்கியது.


Leave a Reply