--- --:--:-- --

ராமேஸ்வரம் நகராட்சி அலுவலகம் முன்பு காலிக் குடங்களுடன் பெண்கள் திடீர் முற்றுகை!!

86cc0724-3201-451f-a83f-46a5335b4dc3

இராமேஸ்வரம் நகராட்சி மூலம் வழங்கப்படும் குடிநீர், இனிமேல் இலவசம் இல்லை என்கிற அடிப்படையில் அனைத்து பொது குடிநீர் குழாய்களையும் நகராட்சி நிர்வாகம் எவ்வித முன்னறிவிப்புமின்றி துண்டிப்பு செய்து வருகிறது . தனியார் இணைப்புகள் மட்டுமே இனிமேல் வழங்கப்படும். சில வருடங்களில் அதுவும் தனியாரிடம் ஒப்படைக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

 

இதனால் பொது குடிநீர் குழாய்கள் இணைப்பை ரத்து செய்ததை கண்டித்தும், மீண்டும் அதே இடத்தில் பொது குடிநீர் குழாய் வைக்க கோரி , இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நகராட்சி அலுவலகத்தில் காலி குடங்களுடன் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. தாலுகா செயலாளர் சே.முருகானந்தம் தலைமை வகித்தார்.

 

மாவட்ட நிர்வாக கவுன்சில் உறுப்பினர் சி.ஆர்.செந்தில்வேல் முன்னிலை வகித்தார், மாவட்ட குழு உறுப்பினர் வடகொரியா, தாலுகா பொருளாளர் ரமணி தாலுகா குழு உறுப்பினர்கள் மோகன்தாஸ்,பிச்சை, செந்தில்,தினேஷ்குமார்,ஜோதிபாசு, காமராஜர் நகர் பகுதி பொதுமக்கள் சார்பில் இராமகிருஷ்ணன் மற்றும் இராமர் தீர்த்தம் தெற்கு,காமராஜர் நகர்,சௌந்தரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பல பெண்கள் கலந்து கொண்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon