திருநங்கைகளுக்கான இல்ல திட்டத்திற்கு அக்ஷய் குமார் ஒன்றரை கோடி நிதியுதவி!
நடிகர் ராகவா லாரன்ஸின் அறக்கட்டளை மூலம் திருநங்கைகளுக்கான இல்லம் கட்டி தரும் திட்டத்திற்கு நடிகர் அக்ஷய்குமார் ஒன்றரை கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். தனது அறக்கட்டளை மூலம் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வரும் நடிகர் ராகவா லாரன்ஸ் அதன் அடுத்த கட்டமாக திருநங்கைகளுக்கான இல்லம் கட்டித்தரும் திட்டத்தை தொடங்கியுள்ளார்.
இந்தநிலையில் ராகவா லாரன்ஸ் இயக்கும் லட்சுமிபாம்ப் எனும் படத்தில் நடித்து வரும் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் இந்த திட்டத்திற்காக ஒன்றரை கோடி ரூபாய் நிதி அளித்துள்ளார்.
தமிழ் படமான காஞ்சனாவின் ஹிந்தி ரீமேக்காக உருவாக்கும் லக்ஷ்மிபாம்ப் படத்தில் அக்ஷய்குமார் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




