--- --:--:-- --

பூமியில் இனி 2 சந்திரனா ? மினி நிலா.!

3

கவிதை எழுதும் கலைஞர்கள் தன்னுடைய காதலியை வர்ணிக்கும் போது இரண்டாவது நிலவே என்று கூட வர்ணிப்பார்கள். ஆனால் இனி கவிஞர்களுக்கு அந்த வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. ஏனெனில் உண்மையாகவே பூமிக்கு இரண்டாவது நிலவு இருப்பதை கண்டறிந்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது.

 

சூரிய குடும்பத்தில் உள்ள பல கோள்களுக்கும் துணைக் கோள்கள் இருக்கின்றன. அதுபோல பூமியின் துணைக்கோளான சந்திரன் பூமியை சுற்றி வருகிறது. இதுவரை பூமிக்கு ஒரே ஒரு துணைக்கோள் மட்டுமே இருந்து வந்த நிலையில், தற்போது சந்திரனை ஒத்த இன்னொரு மிகச் சிறிய கோள் பூமியை சுற்றி வருவதாக வானியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

 

சுமார் 1.9 முதல் 3.5 மீட்டர் விட்டம் கொண்ட அந்த கோளை மினி கோள் என்று குறிப்பிடுகிறார்கள். நாசா உதவியோடு செயல்பட்டு வரும் சர்வதேச வானியல் ஆய்வு மையம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. ஒரு காரின் அளவை ஒத்திருக்கும் இந்த கோள் கடந்த மூன்று ஆண்டுகளாக பூமியின் சுற்றுப்பாதையில் வலம் வருவது இப்போதுதான் கண்டறியப்பட்டு இருப்பதாக கேட்டலினா ஸ்கை சர்வே வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதோடு 2020 ct3 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மினி நிலவின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர். சூரிய குடும்பத்தில் மிதந்துகொண்டிருக்கும் கற்கள் சில சமயங்களில் ஈர்ப்புவிசை காரணமாக உள் சூரிய மண்டலத்தை நோக்கி பயணிக்கும். சில கற்கள் பூமிக்கு அருகே வரும் அப்படிப்பட்ட ஒரு விண் கற்களாக கூட இது இருக்கலாம் என்றும் கருதுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இப்படிப்பட்ட நிலவு போன்ற பொருளை கண்டுபிடிப்பது இது முதன் முறையல்ல.

 

ஏற்கனவே 2006 ஆம் ஆண்டு பூமியை சுற்றி வந்த ஒரு சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் சில ஆண்டுகளிலேயே அந்த சிறு கோள் பூமியை விட்டு பல ஒளியாண்டுகள் தூரம் சென்று விட்டது. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த மினி கோளும் நிரந்தரமான ஒன்று கிடையாது, என்றும் இது வெகு சீக்கிரமே பூமியை விட்டு விலகி சூரியனை நோக்கி செல்லும் வாய்ப்புகள் இருப்பதாகவும் கணித்துள்ளனர் வானியல் ஆராய்ச்சியாளர்கள்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon