--- --:--:-- --

சிஏஏவால் எந்தவொரு இஸ்லாமியரும் குடியுரிமையை இழக்க மாட்டார்கள்

4

தேசிய குடியுரிமை சட்ட திருத்தத்தால் எந்த ஒரு இஸ்லாமியரும் குடியுரிமையை இழக்க மாட்டார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் பாரதிய ஜனதா சார்பில் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு ஆதரவாக பொதுக்கூட்டம் நடைபெற்றது.

 

இதில் பங்கேற்று பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா குடியுரிமை சட்டத் திருத்தத்தால் இந்தியாவில் இருக்கும் இஸ்லாமியர்கள் குடியுரிமையை இழப்பார்கள் என்று எதிர்க்கட்சியினர் தவறான தகவலை மக்கள் மத்தியில் பரப்பி வருவதாக குற்றம்சாட்டினார்.

 

மேலும், இந்த சட்டத்தை எதிர்த்து கலவரத்தில் ஈடுபடும் வகையில் மக்களை எதிர்க்கட்சிகள் தூண்டி விடுவதாகவும் விமர்சித்தார். இஸ்லாமியர் அல்லது மற்றும் மற்ற சிறுபான்மையின இனத்தை சேர்ந்தவர்கள் இந்த சட்டத்தால் குடியுரிமையை இழக்க மாட்டார்கள் என்றும் குடியுரிமையை வழங்கவே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது என்றும் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon