கண்களை கட்டியபடி எதிரே உள்ள பொருட்களை அடையாளம் காட்டும் மாணவிகள்
திருவண்ணாமலை அருகே மிட்ப்ரெய்ன் ஆக்டிவேஷன் என்ற பயிற்சி மூலம் மாணவிகள் துணியால் கண்களைக் கட்டிக் கொண்டு எதிரில் உள்ள பொருட்களை அடையாளம் காட்டியது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த பட்டாங்குளம் பகுதியில் தனியார் பள்ளியில் 500 க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு மிட்ப்ரெய்ன் ஆக்டிவேஷன் என்ற பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
இந்த வகுப்புகளின் மூலம் மாணவிகளின் மூளையின் ஆற்றல் மேம்படுவதாக கூறப்படுகிறது. இதன்மூலம் மாணவிகள் கண்களை துணியால் கட்டி இருந்தபோதிலும் எதிரே உள்ளவற்றை துரிதமாக அடையாளம் கண்டு கூறுகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




