நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த பீட்சா டெலிவரி பாய்!

திரைப்பட நடிகையின் செல்போன் எண்ணில் ஆபாச வாட்ஸப் குழுவில் பதிவிட பீட்சா டெலிவரி பையன் உட்பட 3 பேர் தலைமறைவாகியுள்துகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர், சென்னை தேனாம்பேட்டையில் வசித்து வரும் தெலுங்கு நடிகை காயத்ரி ராவ் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

 

அதில் தனக்கு பல்வேறு எண்களில் இருந்து வரும் செல்போன் அழைப்புகளில் பேசுவோர் ஆபாசமாக பேசி பாலியல் தொழிலுக்கு அழைத்ததாக குறிப்பிட்டிருந்தார். இந்த செல்போன்களை கொண்டு ஆய்வு செய்ததில் நடிகையின் செல்போனில் எண்ணை வாட்ஸ்அப் குரூப்பில் டாமினோஸ் பீட்சா டெலிவரி செய்யும் ஊழியர் பரமேஸ்வர் என்பவர் பதிவிட்டது தெரியவந்தது.

இதனையடுத்து பரமேஸ்வரனை பிடித்து போலீசார் விசாரித்த போது அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார். இந்த சம்பவத்தில் சக்திவேல், சுந்தரம், சந்திரபோஸ் ஆகியோரும் ஆபாசமாக பேசியதை போலீசார் உறுதி செய்துள்ளனர்.

 

இந்நிலையில் மூவரையும் போலீசார் நேற்று விசாரணை செய்த நிலையில் அவர்கள் தலைமறைவாகி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் மூவரையும் பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.


Leave a Reply