கொரொனாவால் பாதிப்பு அடைந்துள்ள அம்பானி!

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலக பொருளாதார வளர்ச்சி கடுமையான வீழ்ச்சியை சந்திக்கும் என ஐஎம்எப் நிறுவனத்தின் தலைவருக்கு ஸ்டாலினால் ஜார்சீவா ஏற்கனவே எச்சரித்திருந்தார். சீனாவை சார்ந்துள்ள நாடுகள் மட்டுமின்றி உலகம் முழுவதும் அச்சுறுத்தலால் ஏற்றுமதி-இறக்குமதி, சுற்றுலாத்துறை, விமானப்போக்குவரத்து, எண்ணெய் தயாரிப்பு என பல்வேறு துறைகளும் ஆட்டம் கண்டுள்ளன.

 

மும்பை பங்கு சந்தையில் இந்திய நிறுவனங்களான டாடா ஸ்டீல், டெக் மஹிந்திரா, பஜாஜ் பைனான்ஸ், இன்ஃபோசிஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ஓஎன்ஜிசி ஆகியவற்றின் பங்குகள் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 5.37 சதவீதம் சரிந்துள்ளது. தொடர்ந்து 6வது முறையாக பங்கு சந்தையின் மதிப்பு சரிந்து இதுவரை மட்டும் முதலீட்டாளர்கள் ரூபாய் 10 லட்சம் கோடி இழப்பை சந்தித்துள்ளனர்.

koro

ஒரு நோயின் தாக்கத்தால் கடந்த 15 நாட்களில் மட்டுமே இந்தியாவின் முன்னணி நிறுவனங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் நம்பர் 1 பணக்காரராக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் 53 ஆயிரத்து 206 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது. முன்னணி நிறுவனமான டாடாவுக்கு 41 ஆயிரத்து 930 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

 

அதானி குழுமத்திற்கு 27 ஆயிரத்து 100 கோடி ரூபாய் இழப்பும், 17 ஆயிரத்து 530 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. சீனாவிலிருந்து இறக்குமதியாகும் உதிரிபாகங்கள் தற்பொழுது நிறுத்தப்பட்டுள்ளதால் இந்தியா மற்றும் பிரிட்டனில் உள்ள தொழிற்சாலையில் ஜாகுவார், லேண்ட்ரோவர் உற்பத்தியும் நிறுத்தப்பட்டுள்ளன.

 

சீனாவில் கொரொனா வைரஸ் பாதிப்பு உலக சுகாதாரத்திற்கு மட்டுமின்றி உலக பொருளாதாரத்திற்கு மிகப்பெரும் பின்னடைவை விடுவித்துள்ளது.


Leave a Reply