கனடாவில் காயமடைந்த தனது நாய்க்கு பெண் ஒருவர் ஆறுதல் கூறி கட்டுப்போடும் நிகழ்ச்சியான டிக்டாக்வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.
பஞ்சாபி பாடல் ஒன்றை பின்புலத்தில் இசைத்துக் கொண்டிருக்க டாபர்மேன் நாய் ஒன்றை நீ ஒரு புத்திசாலி பையன், நல்ல பையன் ல எனக் கொஞ்சியபடி அதன் காயத்துக்கு பஞ்சாபி பெண் ஒருவர் கட்டுப் போடுகிறார்.
அவரின் பேச்சுக்கு கட்டுப்பட்டு டாபர் மேன் அமைதி காக்கும் வீடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. பெற்ற குழந்தைகளை கூட பொறுமையுடன் அணுகாத கடுகடு பெற்றோருக்கு இடையே தான் வளர்க்கும் நாயை மகனாக நினைத்து கவனிப்பதாக பஞ்சாபி பெண்ணுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.