நீதிபதி முரளிதர் பணியிட மாற்றத்திற்கு பிரியங்கா காந்தி கண்டனம்!
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் பணி இடமாற்றம் செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான ட்விட்டர் பதிவில் நள்ளிரவில் நீதிபதி பணியிடை மாற்றம் செய்யப்பட்டது வெட்கக்கேடானது என விமர்சித்துள்ளார்.
நீதித்துறையின் மீது கோடிக்கணக்கான இந்தியர்கள் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், அதனை அரசு அழிக்க நினைப்பதை எண்ணி வருந்துவதாகவும் பிரியங்கா கூறியுள்ளார். சொராபுதீன் வழக்கை விசாரித்த நீதிபதி லோயா பணியிடை மாற்றம் செய்யப்படாதது நினைவுக்கு வருவதாக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
நீதிபதி லோயா சந்தேகத்திற்கிடமான முறையில் மரணம் அடைந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகிறது நினைவுகூறத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




