நின்றுக்கொண்டிருந்த லாரி மீது பேருந்து மோதி விபத்து

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே விதிமுறைகளை மீறி சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த லாரி மீது தனியார் சொகுசுப் பேருந்து மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

 

சென்னையில் இருந்து தூத்துக்குடி நோக்கி தனியார் சொகுசு பேருந்து ஒன்று அத்திமணம் எனும் பகுதி வழியாக சென்றபோது சாலை ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த கனரக லாரி மீது மோதியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

 

பலத்த காயமடைந்த 15க்கும் மேற்பட்டோர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மதுராந்தகம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Leave a Reply