--- --:--:-- --

பெண்கள் குளிப்பதை ரகசிய வீடியோ எடுத்த டிரைவர் கைது…!

15

சென்னை அயனாவரத்தில் பெண்கள் குளிப்பதை ரகசியமாக செல்போனில் வீடியோ எடுத்த ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர். அயனாவரத்தை சேர்ந்த இளம்பெண் தனது வீட்டு குளியலறையில் ஐந்தாம் தேதி குளித்தபோது ஒருவர் எட்டிப் பார்த்ததால் கூச்சலிட்டு உள்ளார்.

 

தாயார் ஓடி வந்தபோது பக்கத்து வீட்டை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் வினோத் செல்போனில் வீடியோ எடுத்து விட்டு ஓடுவதை கண்டார். சுதாரித்து விட்டு அவருடன் இருந்த போனை தட்டிப்பறித்த பரிசோதித்ததில் சொந்தகார பெண்கள் உள்ளிட்ட 18 பெண்களின் குளியல் காட்சியை வினோத் வீடியோ எடுத்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் வினோத்தை அயனாவரம் அனைத்து மகளிர் போலீசார் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon