--- --:--:-- --

படத்திலிருந்து மிஷ்கின் விலகல்! இயக்குனர் அவதாரம் எடுக்கும் விஷால்!

4

துப்பறிவாளன் 2 படத்திலிருந்து இயக்குனர் மிஷ்கின் விலகியுள்ள நிலையில், படத்தை நடிகர் விஷாலை இயக்கவுள்ளார். துப்பறிவாளன் திரைப்படம் வெற்றி பெற்றதையடுத்து அதன் இரண்டாம் பாகம் தயாராகி வந்தது.

 

முதல்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடந்து முடிந்த நிலையில், மீதமுள்ள காட்சிகளை படமாக்க ஒப்பந்தத்தில் பேசிய பட்ஜெட்டை விட கூடுதலாக 40 கோடி ரூபாயை இயக்குனர் மிஷ்கின் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் தயாரிப்பாளர் விஷாலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் மிஷ்கின் படத்தில் இருந்து விலகினார்.

மீதமுள்ள காட்சிகளை விஷாலை இயக்க இருப்பதாக வெளியான செய்திகளை அவர் உறுதி செய்துள்ளார். அதேசமயம் இது குறித்து விளக்கமளித்த மிஷ்கின் தான் 40 கோடி கேட்கவில்லை என்றும், கிளைமாக்சில் விஷால் சாட்டிலைட்டிலிருந்து குதிப்பது போன்ற காட்சியை படமாக்க 400 கோடி கேட்டதாகவும் கிண்டலாக தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon