சென்னையில் பேருந்து நாள் கொண்டாடிய கல்லூரி மாணவர்கள் பயணிகளையும், பொதுமக்களையும் துன்பத்திற்கு ஆளாக்கும் நிலை அதிகரித்து வந்ததால் அதற்கு தடை விதிக்கப்பட்டது. இருந்தாலும் ரூட்டு தல என்ற பெயரில் அவ்வப்போது பஸ்டே கொண்டாடுகின்றனர். போலிசாரின் எச்சரிக்கையையும், அறிவுறுத்தலையும் மீறி சாகசம் செய்ய நினைத்து சங்கடத்தில் சிக்கிக் கொண்ட மாணவர்களும் உண்டு.
இந்த நிலையில், அரசு பள்ளி மாணவர்களும் தடையை மீறி பேருந்து தினம் கொண்டாடுகின்றனர். தாம்பரத்திலிருந்து குன்றத்தூர் செல்லும் பேருந்தில் சேகுவார் பள்ளி மாணவர்கள் சிலர் பஸ்டே என்பதை தெரிவிக்கும் வகையில், பிளக்ஸ் பேனரை கட்டியை பேருந்தின் மேல் கூரை மீது நின்று ஆட்டம் போட்டனர்.
மாணவப் பருவம் என்பது மீண்டும் கிடைக்காத வரப்பிரசாதம், ஆட்டம், பாட்டம் என நண்பர்களுடன் உற்சாகமாக இருந்தாலும் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத நிலையில் இருக்க வேண்டும். இது போன்ற பள்ளி மாணவர்களை அவர்களின் எதிர்கால நலன் கருதி ஆசிரியர்களும், பெற்றோரும் கண்காணித்து கண்டிப்புடன் வளர்க்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.