நடிகைக்கு அத்துமீறி முத்தம் கொடுத்த ரசிகர்

நடிகை ராஷ்மிகா மந்தனாவிற்கு ரசிகர் ஒருவர் அத்துமீறி முத்தம் கொடுத்ததாக வீடியோ ஒன்று பரபரப்பாக வைரலான நிலையில் அது சினிமாவிற்காக எடுக்கப்பட்ட காட்சி என்றும், அதில் உள்ள நடிகை ராஷ்மிகா இல்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

 

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ராஷ்மிகா மந்தனாவிற்கு அங்கிருந்த ரசிகர் ஒருவர் அத்துமீறி முத்தம் கொடுத்து விட்டு தப்பி ஓடியதாக சமூகவலைதளங்களில் வீடியோ உலா வந்தது. இந்த நிலையில் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள ரேமோ என்ற கன்னட படக்குழு அந்த வீடியோவில் இருப்பது ராஷ்மிகா அல்ல என்றும் அது தங்களது பட கதாநாயகியான ஆசிகா எனவும் தெரிவித்துள்ளது.

 

அது திரைப்படத்திற்காக எடுக்கப்பட்ட காட்சி என்றும் விளக்கம் அளித்துள்ளது.


Leave a Reply