--- --:--:-- --

அழவைத்த மருத்துவர் …கோபத்துடன் பார்த்த குழந்தை

8

பிரேசிலில் அழ வைக்க முயற்சித்த மருத்துவரை பிறந்த குழந்தை ஒன்று கடுப்புடன் முறைத்துப் பார்ப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. பிறந்த உடனேயே குழந்தைகள் வீல் என்று அழும் என்பதற்கு மாறாக ரியோடி ஜெனிரோவில் கடந்த மூன்றாம் தேதி பிறந்த இசபெல்லா என்ற பெண் குழந்தை அமைதியாக இருந்ததால் மருத்துவர் அதை அழ வைக்க முயற்சித்தார்.

அப்போது புருவங்களை சுருக்கி கண்களால் கோபத்தை வெளிக்காட்டுவது போல் பார்த்த குழந்தை தொப்புள் கொடியை துண்டித்த உடன் குழந்தை வீல் என்று அழுது இயல்பு நிலைக்குத் திரும்பியது. புகைப்படக்காரர் ஒருவர் படம்பிடித்த இந்த காட்சியை இணையத்தள வாசிகள் தங்களுக்கு ஏற்ற வகையில் மீம்ஸ்களாக மாற்றி பதிவிட்டு வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon