இந்தியாவுக்கு மீட்டு வரப்பட்ட 406 பேருக்கும் கொரானா வைரஸ் பாதிப்பு இல்லை

சீனாவின் உகான் நகரில் இருந்து இந்தியாவிற்கு மீட்டு அழைத்து வரப்பட்ட 406 பேருக்கும் வைரஸ் பாதிப்பு இல்லை என தெரிய வந்துள்ளது. உகானில் சீன நகரங்களில் இருந்து மீட்டு விமானம் மூலம் அழைத்து வரப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் சிறப்பு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்தனர்.

 

அவர்களது இரத்த மாதிரிகள் ஏற்கனவே பரிசோதிக்கப்பட்டன. இந்தநிலையில் உகான் நகரில் இருந்து மீட்டு வரப்பட்டு டெல்லியிலுள்ள இந்தோ – திபெத் போலீஸ் மையத்தில் வைக்கப்பட்டுள்ளன. 406 பேரின் ரத்த மாதிரிகள் இறுதி முறையாக கடந்த வெள்ளிக்கிழமை சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டன.

 

அதில் எவருக்குமே பாதிப்பு இல்லை என தெரிய வந்ததாகவும், அனைவரும் படிப்படியாக இல்லம் திரும்புவார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Leave a Reply