திருப்பூரில் 47-வது ஆயத்த ஆடை கண்காட்சி

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் 47வது ஆயத்த ஆடை கண்காட்சி நடைபெற்று வருகிறது. ஐகே‌எஃப் வளாகத்தில் 3 நாட்களுக்கு நடைபெறும் இந்தக் கண்காட்சியில் 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்துகின்றன.

 

திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தை மேம்படுத்தும் நோக்கில் நடைபெற்று வரும் இந்த கண்காட்சிக்கு அமெரிக்கா, ஐரோப்பா, ஐக்கிய அரபு உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து முதலீட்டாளர்கள் பார்வையாளர்களாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Leave a Reply