திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் மணிகண்டன் மர்ம மரணம்! பாத்ரூமில் சடலம்!

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா திருவாடானை .ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தஞ்சாவூர் மாவட்டம் திருவாலூரைச் சேர்ந்த பன்னீர் செல்வம் மகன் மணிகண்டன் (35) இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த சில காலமாக உடல்நிலை பாதிக்க பட்டிருந்த நிலையில் இருந்தார்.

இன்று காலை சக பணியாளர்கள் சென்று பார்த்த போது ஊராட்சி ஒன்றிய அலுவலக அலுவலக வளாகத்தில் உள்ள உள்ளாட்சி தனிக்கை துறை அலுவலக கழிப்பறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவலின் பேரில் வந்த திருவாடானை காவல் நிலையத்தார் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை செய்து வருகிறார்கள்.


Leave a Reply