ராமநாதபுரம் பாத்திமா கல்வி நிறுவனங்கள் , கொடைக்கானல் மதர் தெரசா மகளிர் பல்கலை., கல்வி மையம், அழகப்பா பல்கலை., ஜாஸ் கேட்டரிங் மற்றும் தொழிற்பயிற்சி பள்ளி 12 ஆம் ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா, அறம் விழுதுகள் அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
ஜாஸ் கேட்டரிங் கல்லூரியில் நடைபெற்ற விழாவில், ராமநாதபுரம் பாத்திமா டிரஸ்ட் கல்வி நிறுவனங்களின் முதல்வர் ஏ.முகமது சலாவுதீன் முன்னிலை வகித்தார். ஆசிரியை விமலா வரவேற்றார். நிர்வாக அலுவலர்
சுஜித்ரா ஆண்டறிக்கை வாசித்தார். 88 பேருக்கு திறன் பயிற்சி உதவி இயக்குநர் எஸ்.ரமேஷ்குமார்
பட்டம் வழங்கினார்.
ராமநாதபுரம் சேதுபதி அரசு கலை கல்லூரி பொருளியல் துறை தலைவர் க.ராமகிருஷ்ணன் வாழ்த்துரை பேசினார். உளவியல் ஆசிரியை பத்மாவதி நன்றி கூறினார்.