--- --:--:-- --

தனியார் மருத்துவமனை ஊழியர் மீது கார் மோதும் சி‌சி‌டி‌வி காட்சி

5

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு சாலையில் நடந்து சென்ற தனியார் மருத்துவமனை ஊழியர் மீது கார் மோதி விட்டு நிற்காமல் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன .கொல்லங்கோடு சேர்ந்த தனியார் மருத்துவமனை ஊழியர் அபிலாஷ்.

 

இளம் பாலமுக்கு பகுதியில் கடந்த 2ஆம் தேதி சாலையில் நடந்து சென்றார். அப்போது பின்னால் வந்த கார் மோதி விட்டு வேகமாக சென்றுவிட்டது, இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பாரசாலை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

புகாரின்பேரில் கொல்லங்கோடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பரிசோதித்ததில் அபிலாஷ் மீது கார் மோதும் காட்சி கண்டறியப்பட்டது. இதை எடுத்து காரின் பதிவு எண் 6 8 6 7 என்பதை கொண்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon